WHATSAPP - Bobble Indic Keyboard

வாட்ஸஅப்பில் Bobble Indic Keyboard பயன்படுத்துவது எப்படி என்பதினைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பர்க்கலாம்?


Bobble Indic  Keyboard - ஒரு பார்வை:

Bobble ஸ்டிக்கர் Keyboard  ஆனது உங்கள் மொபைலில் உள்ள செல்ஃபியுடன் இணைந்து அற்புதமான தனித்தன்மையுடன் கூடிய கார்ட்டூன் தலையை உருவாக்குகிறது , மேலும்  ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் களை(gif) உங்கள் Bobble மூலம் செல்ஃபியினால் உருவாக்கபட்ட தலை உருவத்துடன் சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. சாதாரணமாக வாட்ஸ்அப்பில் பெரிய அளவிலான ஈமோஜிகளை. அனுப்ப முடியாது. ஆனால் நீங்கள் Bobble Keyboard மூலம்  பெரிய அளவிலான ஈமோஜிகளை உடனடியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

சிறப்பம்சங்கள்:

நமது Keyboard-ல் இருக்கும்  நாம் விரும்பும் எல்லா அம்சங்களினையும் விட அதிக அம்சங்களினை Bobble Indic Keyboard கொண்டுள்ளது,1000க்கு மேற்பட்ட ஈமோஜிகள், மீம்ஸ்கள், ஸ்டிக்கர்கள், நகைச்சுவையான GIFகள், தீம்கள் மற்றும் எழுத்துருக்கள்(emojis, memes, stickers, humorous GIFs, themes & fonts.)ஆகிய அதிகமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.இதில் சறுக்கு தட்டச்சு, குரல் தட்டச்சு(glide typing, voice typing) போன்ற மேலும் பல அம்சங்களும் உள்ளன.கிட்டத்தட்ட telegram applicationனை பயன்படுத்தும் அனுபவம் இந்த கீ போர்டினை பயன்படுத்தினால் நமக்கு கிடைக்கும்,இதில் விளம்பரம் இல்லாத கட்டணம் செலுத்த வேண்டும்,இதை பயன் படுத்தினால் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், உங்களை போலவே உள்ள அனிமேஷன் செய்யப்பட்ட sticker ,பெரிய அளவிலான ஈமோஜி ,தட்டச்சு செய்யும் எழுத்தின் FONT -னை மாற்றி அமைக்கும் வசதி போன்றவற்றினை நமது விருப்பம் போல் இயக்கலாம், என்பது இதன் விசேஷ அம்சம்,இதில் தமிழ் மொழி உட்பட இந்தியாவில் உள்ள பல மொழிகளினை பயன்படுத்தும் வசதியும் உள்ளன,

வேலை செய்யும் முறை

இதில் GIF என்ற  பட வடிவம் (Image format) பயன்படுத்தப்படுகிறது ,இதனால் நாம் அனுப்பும் font மாற்றப்பட்ட text ஆனது image ஆக மாற்றப்பட்டு பெறுபவருக்கு அனுப்பப்படுகிறது,அதனால் எல்லாருக்கும் தங்கு தடையின்றி தெரியும்.பெறுபவருடைய போனில் இந்த application இருக்கவேண்டிய அவசியமில்லை.அதன் பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்க Bobble ஒரு சுய கற்றல்(learning algorithm) வழிமுறையைப் பயன்படுத்துகிறது.  மேலும் இந்த அம்சங்கள் இருப்பதால், செல்ஃபி அடிப்படையிலான ஸ்டிக்கர் பயன்பாட்டினை Bobble தொடங்கியது. இது ஒரு முக அங்கீகார அம்சத்தைக் கொண்டுள்ளது, இது செல்ஃபிக்களை GIF கள் மற்றும் ஸ்டிக்கர்களாக மாற்ற பயன்படுகிறது. அதன் பிற அம்சங்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட படி பன்மொழி மொழி ஆதரவு,சறுக்கு தட்டச்சு, மாற்றி அமைக்கும் எழுத்துருக்கள், themes, குரல் தட்டச்சு மற்றும் தானியங்கு திருத்தம்(Auto Correct) ஆகியவை அடங்கும். இது பேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் மெசஞ்சர் போன்ற தளங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் செயல்படுகிறது. முகத்தின் வெளிப்பாடுகள், தலை மற்றும் முகத் தொனியை மாற்றும் ஸ்டிக்கரின் உணர்ச்சி, தீம் மற்றும் உடலுடன் பொருத்தக்கூடிய திறனுடன் பாபலின்  எல்லா அம்சங்களும் நிகழ்நேரத்தில் செயல்படுகின்றன.

Bobble Indic  Keyboard வரவு:

இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உட்பட 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாபிள் கிடைக்கிறது.இந்தியாவில் அதன் ஆரம்ப வெளியீட்டின் போது, ​​15 மாத காலப்பகுதியில் பாபில் 6 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.ஜூலை 2017 இல், கூகிள் பிளே ஸ்டோரில் இண்டிக் கீபோர்டுகள் பிரிவில் பாபில் முதலிடம் பிடித்தது. இந்தியாவில் முதல் இடத்திலும், உலகளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2015 முதல், இது 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அது அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 1.5 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கடந்தது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பயன்பாடு பிளே ஸ்டோரின் "உலகளவில் மிகவும் ஈர்க்கக்கூடிய சிறந்த 150 பயன்பாடுகளில்" பட்டியலிடப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள்,உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Bobble Indic Keyboard வீடியோ செயல்முறை: