ஆண்ட்ராய்டில் Fake location அமைப்பது எப்படி ?

ஆன்ட்ராய்டு -ல் போலி இருப்பிடத்தை உள்ளமைக்கும் முறை:

நமது Android போனில் GPS இருப்பிடத்தை(Fake location) ஏமாற்றும் வசதி உள்ளது ,இது டெவலப்பர்களுக்கு தேவைப்படுவதால் இந்த வசதியினை ஆன்ட்ராய்டு அனுமதிக்கிறது, பயன்பாடுகள்(application), ROM கள் மற்றும் பிற சேவைகளை பரிசோதனை செய்வதற்கு பயன்படுகிறது.இவ்வாறு இது டெவலப்பர்களுக்கு பல பங்களிப்புகளை வழஙகுகிறது,

அதேப் போல் , நமது மொபைலில் உள்ள GPS ஐ ஏமாற்றுவதினால் நமக்கும் சில பயன்கள் உள்ளன.அதில் முக்கியமாக இந்தியாவில் தடை செய்யயப்பட்ட யூடுயூப் வீடியோக்கள் பலவற்றினை பார்க்கலாம்,இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையத் தளங்களையும் பார்க்கலாம் .துரதிர்ஷ்டவசமாக, போலி இருப்பிட அமைப்பு பயன்பாட்டில்(application) இருக்கும்போது சில பயன்பாடுகள் அதனை கண்டறிந்து பிளேபேக்கைத் தடுக்கும் என்பதால் இது முழுமையான தீர்வாக இருக்காது. அதேப்போல் உங்கள் போலியான இருப்பிடங்களினை Facebook, WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் பகிரலாம்.இதை வைத்து தான் பலர் இருப்பிட அடையாளத்தினை மாற்றி மோசடிகளிலும் ஈடுபடுகிறார்கள்,இத்தகையவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்,ஏனெனில் இந்த அமைப்பு கூகிள் வரைபடத்தையே ஏமாற்றக் கூடியது.

போலி இருப்பிடம்(Fake Location) முறையினை ஆன்ட்ராய்டு மொபைலில் எப்படி பயன்படுத்துவது என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்

Android இல் போலி இருப்பிடத்தை இயக்கும் முறை:

  1. டெவலப்பர் விருப்பங்களில்   போலி இருப்பிடம் அமைப்பினை இயக்கவும்.
  2. போலி ஜி.பி.எஸ் இருப்பிட பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.
  3. பயன்பாட்டில் போலி  இருப்பிடம் செயல் பட அனுமதிக்கவும்.
  4. இருப்பிட-ஏமாற்று பயன்பாட்டை செயலில் இருக்குமாறு அமைக்கவும்.


Fake GPS Tamilfitech

உங்கள் மொபைலில் டெவலப்பர் விருப்பம் செயல்படுத்தவில் எனில் உங்கள் மொபைலில் About Phonesoftware informationbuild no க்கு சென்று build no னை 6 முறை தட்டினால் அது செயல் முறைக்கு வந்துவிடும்,அதில் நீங்கள் allow mock location என்ற அமைப்பை தேர்ந்தடுக்கும் button வழியாக இயக்கவும்,

Fake GPS Tamilfitech

போலி ஜி.பி.எஸ் இருப்பிட பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவவும்.

உங்களுக்கு ஒரு போலி ஜி.பி.எஸ் இருப்பிட ஏமாற்று பயன்பாடு தேவை. அவை அதிகமாக கூகிள் ஸ்டோரில் உள்ளன, , நீங்கள் Fake GPS "போலி ஜி.பி.எஸ்" என்று தட்டச்சு செய்யும் போது பிளே ஸ்டோரில் தெரியும் , சிறந்த பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பெறலாம். இந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவை கட்டண பயன்பாடுகள் ஆகும்,அதனால் அந்த பயன்பாடுகளே எதாவது ஒரு இருப்பிடத்தினை நமக்கு தேர்ந்தெடுத்து காட்டும்,கட்டண முறையில் நீங்கள் குறிக்கும் இடம் உங்கள் இருப்பிடமாக காட்டும், இந்த பயன்பாடுகளில் சில நீங்கள் விரும்பிய போலி இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வரைபடத்தை உங்களுக்கு வழங்குகின்றன,
Fake GPS Tamil

பயன்பாட்டில் போலி இருப்பிடம் செயல் பட அனுமதிக்கவும்

நான் விளக்குவதற்காக, Fake GPS என்கிற பயன்பாட்டை நிறுவி இருக்கிறேன்,இதனை open செய்தவுடன் ஒரு play பட்டன் இருக்கும்,அதனை தட்டினால் போலி இருப்பிடம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்,

அவ்வளவு தான் ,உங்கள் மொபைலில் போலி இருப்பிட அமைப்பு வேலை செய்ய ஆரம்பித்து விடும்,

இப்போது கூகிள் வரைபடம் ,முகநூல்,வாட்ஸாப்ப் பயன்பாடுகளில் சென்று சோதனை செய்து பார்த்தீர்களானால்,உங்கள் fake GPS பயன்பாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட போலி இருப்பிடம் ஆனது மேற்கண்ட எல்லா பயன்பாடுகளிலும் தெரியும்,

Fake GPS Tamil

 Google map ,Facebook ,WhatsApp இல் தோன்றும் போலி இருப்பிட அமைப்பு 

இதேப்போல்  PAYTM spoof  பயன்பாடும் சமீபத்தில் வெளிவந்துள்ளது ,அது பற்றி மற்றுமொரு பதிவில் பார்க்கலாம்,எனவே PAYTM பரிவர்தனைகளின்  போது கவனமாக இருக்கவும்.பணம் உங்களுக்கு வந்து சேரும் வரை காத்திருந்து சரி பார்க்கவும்,