ஒன்ட்ரைவ் மற்றும் கூகிள் டிரைவிற்கான வேறுபாடுகள்:

ஒன்ட்ரைவ் மற்றும் கூகிள் டிரைவிற்கான வேறுபாடுகள்:


ஒன்ட்ரைவ் மற்றும் கூகிள் டிரைவிற்கான வேறுபாடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.பொதுவாக இணைய சேமிப்பகத்தில் Box, ICloud, Sync, Icedrive, Amazon Drive, pCloud, Google Drive, Dropbox, IDrive, WorkDrive, OneDrive,Mega போன்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன.ஆனால்  இங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களில்   பலர், உண்மையில் கூகிள்ஒன் தான் சிறந்தது  என்று தெரிவிக்கிறார்கள். ஏனெனில் நாம் வாங்கும் கணினி அல்லது ஸ்மார்ட் போன்களில் இயல்பாகவே அதைப் பெறுகிறோம், கூகிள் ,மைக்ரோசாப்ட் இரண்டும் இந்த இயங்குதளம் உள்ள சாதனம் இருப்பவர்களுடன் எளிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.அடிப்படையில் இவை இரண்டும் ஒரே விஷயம், சில கூடுதல் அம்சங்கள் மற்றும் தனிநபர்களுக்கான தகவல்கள் மற்றும் வசதிகள் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது,இந்த இணைய சேமிப்பகத்தை ஃப்ரீலான்ஸர்கள் எனப்படும் இலவச விரும்பிகள்,தனி நபர்கள் , நண்பர்கள் குழு அல்லது குழு வேலை செய்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள்  டிரைவ் என்ற இணைய தள சேமிப்பகத்தைத் நாடுகின்றனர். எனினும்  இதில் வணிக நிறுவனகள்   எதுவும் அதிக கவனம் செலுத்தப் போவதில்லை, ஏனெனில் அவர்கள் தங்களுக்கு தேவையான சேமிப்பகத்தினை செர்வெரில் சொந்தமாக வைத்து இருப்பார்கள்.எனவே  மைக்ரோசாப்ட் டிரைவ்ஒன் மற்றும் கூகிள்ஒன் என இரண்டிலும் உள்ள கட்டண  திட்டங்களில் நீங்கள் ஆர்வமாக இருந்தால்  இரு தளங்களை பற்றி  கீழகண்ட பிரிவில் விரிவான ஒப்பீடுகளை  பார்க்கலாம்.,
  1. கட்டண திட்டங்கள்:
  2. கோப்பு பகிர்வு(File Sharing):
  3. தயாரிப்பு பயன்பாடுகள்:
  4. ஆன்லைன் தனியுரிமை:
  5. தரவு பாதுகாப்பு:
  6. தரவு தற்காப்பு:
  7. முடிவுரை :
கூகிள் டிரைவ் சேமிப்பிடத்தை வாங்குவதற்கு இனிமேல்  நீங்கள் கூகிள்ஒன்  என்ற கூகிளின் திட்டதில்  வாங்க வேண்டும், இது இப்போது கூகிள் டிரைவ் என்பதின் மறுபெயராக மாற்றப்பட்டுள்ளது.

1.கட்டண திட்டங்கள்:

மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் என்பவற்றில் நீங்கள் எந்தவொரு சாதனத்தினை கொள்முதல் செய்தாலும் நாம்  அடிப்படையில் அந்த தளங்களில் சந்தாதாரராக ஆகி உள்ளீர்கள். நாம்  வாங்கிய சாதனங்களில் ,கண்டிப்பாக ஒன்டிரைவ் மற்றும் கூகிள்டிரைவ் ஆகிய  இரண்டும்  இலவச திட்டத்தை கொண்டு  இருக்கும்,ஒன்டிரைவ் இலவச திட்டம் நமக்கு  5 ஜிகாபைட் டிரைவ் சேமிப்பிடத்தை மட்டுமே தருகிறது.ஆனால் கூகிள் டிரைவ்ஒன் டிரைவுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு சேமிப்பு அளவு 15 ஜிபி யினை கொடுக்கும்.மற்றும் நாம்  நமது  எக்செல் ஆன்லைன், கூகிள் டாக்ஸ், ஸ்லைடு தாள்கள் மற்றும் கூகிள் புகைப்படங்களுடன் எளிதாக இணைக்கப் பட்டு அவற்றினை பயன்படுத்தலாம் . ஆனால் நாம்  கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு வித்தியாசம் உள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் அஞ்சல் சேமிப்பகத்தில் தனியாக 15 ஜிகாபைட் கிடைக்கிறது, இந்த கொள்ளளவு உங்கள் ஒன்டிரைவ் ஸ்டோரேஜுடன் சேராமல் தனியாக கிடைக்கும், இதில் நமது மின்னஞ்சல்கள் மட்டும் அல்ல கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் கூட யாராலும் திருட முடியாது. அந்த அளவுக்கு மைக்ரோசாப்ட் பாதுகாப்பு அம்சத்தினை கொண்டுள்ளது,இந்த அளவு பாதுகாப்பு கூகிளில் கிடைக்குமா என்பது சந்தேகமே!, மேலும்  ஜிமெயில் மின்னஞ்சலின் சேமிப்பு கொள்ளளவு  கூகிள்டிரைவ் சேமிப்பு கொள்ளளவுடன்  இணைக்கப்பட்டு உள்ளது. எனவே நமது  கோப்புகள் மற்றும் மீடியாவை சேமிக்க ஒரு ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தி,அதே மின்னஞ்சலினை நமது  முதன்மை மின்னஞ்சல் சேவையாகப் பயன்படுத்தினால், சேமிப்பிடம் எளிதில் நிரம்பி விடும்   , எனவே நாம் எப்பொதும் நமது  தனிபபட்ட  மின்னஞ்சல் சேவையில் மற்ற வசதிகளினைப் பயன்படுத்தால் இருப்பது நல்லது,அதற்கு மற்றொரு கணக்கினை பயன்படுத்தி கொள்ளலாம்.அப்போது உங்கள் தனிப் பட்ட மின்னஞ்சல் சேவைக்கும்  15 ஜிபி சேமிப்பு குறையாமல் கிடைக்கும். எனவே இலவச சேமிப்பகத்தினை பொருத்த வரையில் கூகிள்டிரைவ் ஆனது ஒன் டிரைவை விட சிறந்ததாக இருக்கிறது.
இரு தளங்களின் குறைந்த கட்டண திட்டத்தில் மாதத்திற்கு ₹130 ரூபாய்கள் கூகிள்டிரைவ்க்கும் ₹140 ரூபாய்கள் ஒன்டிரைவுக்கும் செலவாகும் , அவை இரண்டும் நமக்கு  மாதம் 100 ஜிகாபைட் சேமிப்பிடத்தை வழங்குகின்றன, ஆனால் மீண்டும் நாம்  நினைவில் கொள்ள வெடியாது ஒன்று உள்ளது,அது என்னவெனில்,நமது மின்னஞ்சல் சேமிப்பு கொள்ளளவு ஆனது  நாம் கூகிள்ஒன் திட்டதில் இருந்தால் அதனுடன் சேர்த்து  கணக்கிடப்படாது ,மற்றும் நாம்  பெறும் ஒன்டிரைவ் 5 ஜிபி மற்றும் கூகிள் டிரைவ் 15 ஜிபி ஆகிய இரண்டும் நமக்கு கூடுதல் வசதியாக கிடைக்கும்,என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இதற்க்கு அடுத்த கட்டண பிரிவு கூகிள்ஒன் வழங்கும் மாதம் 200 ஜிகாபைட் திட்டம்  ஆகும்,இதற்கு மாதம் ₹210 ரூபாய்கள் கட்டணமாக செலுத்தவேண்டும், இந்த திட்டம் மைக்ரோசாப்ட்   ஒன்டிரைவ்-ல் இல்லை.எனவே இந்த விலையில் சற்று கூடுதலாக  100 ஜிகாபைட் வேண்டும்  என்றால் நமக்கு நிச்சயமாக கூகிள்ஒன் தான்  சிறந்த திட்டம் ஆகும். கூகிள்ஒன்னின்  அடுத்த திட்டம் ஆனது மாதம் ₹650 ரூபாய்களுக்கு 2 டெராபைட்(TB ) திட்டம்  ஆகும்,மேற்கண்ட எல்லா கூகிள்ஒன் கட்டண திட்டத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களினை சேர்த்துக்கொள்ளலாம்,மேலும் கூகிள் நிபுணர்கள் உங்களின் தேவைகளுக்கு உடனடி உதவி புரிவார்கள் , கூகிள்ஒன்னின் 2TB திட்டம் ஆனது ஒரு மாதத்திற்கு ₹489 ரூபாய்களுக்கு வழங்கும் மைக்ரோசாப்ட் ஒன்டிரைவ் திட்டம் வகைப்படுத்தப்படுகிறது இந்த திட்டத்துடன் இணைந்து மைக்ரோசாப்ட் 365 தயாரிப்புக்கள்  கிடைக்கிறது.ஆனால் சேமிப்பிற்காக மைக்ரோசாப்ட் 365 தயாரிப்புக்களின்  வசதியுடன் 1 டெராபைட் வரையிலான சேமிப்பிடத்தை மட்டுமே பெற முடியும்.இதனை 2 டெராபைட்டுகள் வரை வேண்டுமானால் விரிவாக்கம் செய்யலாம் ,ஆனால் இதற்கு மாதம்  1 TB-க்கு மேலும் ₹489 ரூபாய்கள் கட்டணம் செலுத்த வேண்டும், மொத்தமாக ஒரு கணக்கிற்கு  3TB கொள்ளளவு  வரை கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.கடைசியாக உள்ள திட்டம் ஆனது   மைக்ரோசாப்ட் ஒன்டிரைவின் ஒரு வருட திட்டம் ஆகும்,இது    ₹ 6199 ரூபாய்கள்  மதிப்பு கொண்ட வருடத்திற்கு 6TB சேமிப்பக திட்டம் ஆகும்,இதில் நமது  குடும்ப உறுப்பினர்கள் அல்லது நமது நண்பர்கள் என  6 பேர் வரை  மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்,ஓவ்வொருவருக்கும் தலா 1TB அளவு  பிரித்து கொடுக்கப்படும், மேலும்,நமக்கு தேவைப்பட்டால்  2TB அளவுக்கு அதிக சேமிப்பகத்தினை கட்டணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம் ,மொத்தம் 8TB வரை இந்த திட்டத்தின் கீழ் பாயன்படுதிக் கொள்ளலாம்  . இது தான் மைக்ரோசாப்ட் ஒன்டிரைவின் அதிக பட்ச சேமிப்பகத்திற்கான கட்டண திட்டமாகும்,இதன் மூலம் நாம்  ஒரு சரியான தீர்வைத் தேடினால்  நமது  கட்டண சந்தாவில் அதிக அளவு சேமிக்கலாம்,


எப்படி எனில்  கூகிள் டிரைவ் அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களை வழங்கும்போது, ​​மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் மட்டும் நமது பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது. உதாரணமாக வருடம் ₹6500 ரூபாய்க்கு , கூகிள் டிரைவ் நமக்கு  2TB சேமிப்பிடத்தை மட்டும் தருகிறது , ஆனால் ஒன்ட்ரைவ் வருடம் ₹6199 ரூபாய்க்கு 6TB அளவிலான சேமிப்பகத்தை அதன் மற்ற  365 அலுவலக தயாரிப்புகளுடன் தருகிறது . எனவே, நாம்  எதை தேர்வு செய்வோம் - ஒன் டிரைவ் Vs கூகிள் டிரைவ்? பதில் வெளிப்படையானது.

2.கோப்பு பகிர்வு(File Sharing)

கிளவுட்(இணைய) சேமிப்பு அடிப்படையிலான டிரைவ்களில் கோப்பு பகிர்வு(File Sharing) எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நாம் எளிதாக  உபயோகப் படுத்தலாம். கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பதற்கு  மட்டுமல்லாமல், கோப்பு ஒருங்கிணைத்தல் (Sync), பகிர்தல் மற்றும் மீட்டெடுத்தலுக்கும் (sharing and retrieving)பயன்படுத்தப்படுகிறது. இன்று, கிளவுட் சேமிப்பிடம் பயனுள்ள ஆன்லைன் ஒத்துழைப்புக்கு மிகுந்த  கட்டுப்பாடுகளுடன் கூடிய மிகச்  சிறந்த அமைப்பு ஆகும். , எனவே, நமக்கு கோப்பு பகிர்வு என்பது மிகவும்  எளிதானது.
கூகிள்ஒன் மற்றும் ஒன்ட்ரைவ் இரண்டுமே கோப்பு பகிரும் தன்மைகளில்  அடிப்படையில் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன . இரண்டிலுமே , நாம்  தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பை வலது கிளிக் செய்து, “பகிர்” என்பதைக் கிளிக் செய்து  நாம்  கோப்பைப் பகிர விரும்பும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடலாம், அல்லது “பகிரக்கூடிய இணைப்பைப் பெறுக” என்பதைக் கிளிக் செய்து , ”விருப்பத்துடன் பகிரப்பட்ட இணைப்பு" உருவாக்கி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பலாம்.

3 .தயாரிப்பு பயன்பாடுகள்:

கிளவுட் சேமிப்பிடம் ஆனது இன்று, தனிநபர்களும், நிறுவனங்களும் கிளவுடில் தகவல்களைச் சேமித்து, அதனை திரும்பவும் எடுத்து பயன் படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை  நிகழ்நேரத்திலும்(Online) திருத்தும் வசதியும் உள்ளது  . எனவே, கிளவுட் சேமிப்பக சேவைகள் தயாரிப்பாளரின் சில செயல்பாடுகளை வழங்க வேண்டியது அவசியம். இது உள்ளக பயன்பாட்டுத்(In-House Application) தொகுப்புகள் மூலமாக செய்யப்படுகிறதா அல்லது மூன்றாம் தரப்பு பயன்பாட்டு(third-party app integration) ஒருங்கிணைப்பு மூலம் செய்யப்படுகிறதா என்பது கிளவுட் சேமிப்பகம்  சேவை தருபவரினை பொறுத்தது.
கூகிள்டிரைவ் ஆனது கூகிள் டாக்ஸ், கூகுள் ஷீட்கள் மற்றும் கூகிள் ஸ்லைடுகள் போன்ற அவற்றின் சொந்த தயாரிப்புக்களுக்கு மிகவும்  ஒத்துழைப்பு தரும் அடிப்படையிலான ஆன்லைன் தொகுப்பை கூகிள் டிரைவ் வழங்குகிறது. இந்த தொகுப்பில்   “ஆஃப்லைன்” வசதியும் உள்ளது, ஆகவே இந்த தொகுப்பினை  இணைய இணைப்பு இல்லாமல் கூட திருத்தவோ/மாற்றி அமைக்கவோ செய்யலாம். கூகிள்டிரைவின் பயனர்களுடைய  விருப்பங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க, கூகிள் டிரைவில் ஒருங்கிணைக்கக்கூடிய பயன்பாடுகளை குறியீடு செய்ய Android டெவலப்பர்களை கூகிள் அனுமதிக்கிறது.
இருப்பினும், கூகிள் டிரைவ் வருவதற்க்கு முன்னால் இருந்தே  மைக்ரோசாப்டின் அலுவலக தயாரிப்புகளின் தொகுப்பு குறித்து மக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளதால் . கூகிளின் தயாரிப்பு பயன்பாடுகளைப் போலல்லாமல், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பல வருடங்களாக பயன்பாட்டில்  உள்ளது மற்றும் பெரும்பாலான மக்கள் அதன்  பயன்பாடு குறித்து  மிகவும் அதிகமாக தெரிந்து இருப்பதின் காரணமாக இதை அதிகமாக விரும்பலாம்.
மைக்ரோசாஃப்ட் ஆபிஸுடன் (வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட்) நீங்கள் பல ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், நீங்கள் இதன் பயன்பாடுகள் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு இருப்பீர்கள்  என்பதை மற்ற எல்லாரையும் விட நீங்கள் நன்றாக அறிவீர்கள். இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும், மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் ஆனது நமது  பணத்திற்கு மதிப்புள்ள தளம் ஆகும், ஏனெனில் கிளவுட் ஸ்டோரேஜ் தயாரிப்பில்  தனிப்பட்ட / இலவச பதிப்புகளுடனே கூட, நமக்கு  மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆன்லைனுக்கான அணுகல் உள்ளது,

4.ஆன்லைன் தனியுரிமை :

தகவல் தனியுரிமை என்பது விவாதம் மற்றும் சர்ச்சை ஆகிய இரண்டின் முக்கிய காரணியாக உள்ள ஒரு தலைப்பு ஆகும் . கிளவுட் சேமிப்பகத்தின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்று, என்னவெனில்  இணையத்தில் எங்களுடைய "சொந்த தனிப்பட்ட டிஜிட்டல் இடத்தை" பயனருக்கு  வழங்குகிறோம்  என்பது  சேவை அளிக்கும் நிறுவனத்தின்  தனிஉரிமை ஆகும் , ஆனால் நாம் அதனை பயன்படுத்தும் போது "சொந்த தனிப்பட்ட இடம்" என்கிற உரிமை நாம் நம்ப விரும்பும் அளவுக்கு தனிப்பட்டதல்ல என்று மாறிவிடும்,அதாவது நமது தரவுகள் (Data) அனைத்தும்  நாம் பயன்படுத்தும் நிறுவனத்திற்கே  சொந்தம் .
மேலும்,‘தீங்கிழைக்காத நோக்கங்களுக்காக’ அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்   மற்றும் தரவுகள் ஆகியவற்றினை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதாக  கூகிள் மீது மோசமான  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விளம்பரத்திற்காக கிளவுட் குறித்த பயனர்களின் தகவல்களைப் பயன்படுத்துவது அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை என்பதை நாம்  புரிந்துகொண்டாலும், அது அந்த பயனர்களின்  தனியுரிமைக்கு எதிரான முயற்சி ஆகும். . மறுபுறம், மைக்ரோசாப்ட் எந்தவொரு பயன் படுத்தாத பயனர்களின் தகவல்கள் மற்றும்   , அதன் பயனர்களின் கோப்புகளை அல்லது தகவல்களினை ஸ்கேன் செய்யும் முழு உரிமை உண்டு என்பதே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உடைய  குறிபிட்ட தனிஉரிமை ஆகும் , இது விளம்பரங்களால் தங்கள் பயனர்களை தொல்லை செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தாது.
எனவே உங்கள் ஆன்லைன் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், செல்ல வழி ஒன்ட்ரைவ் ஆகும்.

5.தரவு பாதுகாப்பு

கிளவுட் மூலம், உங்கள் கோப்புகளை கிளவுடில் ஏற்றியதில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எனவே, தரவு(Data) பாதுகாப்பு என்பது கிளவுடில் ஒரு முக்கியமான பிரச்சினை. பாதுகாப்பைக் கையாள்வதற்கான முறையான வழி மட்டும்  இல்லை என்றால்,தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சொந்தமான  தரவு பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்க ஹேக்கர்கள் சாத்தியமான ஒவ்வொரு வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றனர்.
டிராப்பாக்ஸ் மற்றும் கூகிள் போன்ற முக்கிய கிளவுட் ஸ்டோரேஜ் நிறுவனங்கள் மீண்டும், மீண்டும் தவறான காரணங்களுக்காக தலைப்பு செய்திகளை உருவாக்கியுள்ளன. 2012-ம் ஆண்டில், டிராப்பாக்ஸ் ஒரு பெரிய தரவு மீறலை சந்தித்தது, இது 68 மில்லியன் கடவுச்சொற்களை மாற்றி அமைத்து சரி செய்தது. கூகிள் ஒரு முறை அல்ல, பல முறை பாதுகாப்பு மீறல்களை சந்தித்தது: 2014-ல் ஒரு முறை ரஷ்ய ஹேக்கர் 4.93 மில்லியன் கூகிள் கணக்குகளை இயங்க விடாமல் செய்த சம்பவம்,மற்றும் ​​ 2016-ல் சுமார் 24 மில்லியன் ஜிமெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவமும் உண்டு.
தரவு பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. மைக்ரோசாப்ட் அத்தகைய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்பதால், ஒன்ட்ரைவ் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான தேர்வாக கருதப்படலாம்.

6.தரவு (Data)தற்காப்பு:

கூகிள் டிரைவ் ஏஇஎஸ் 128-பிட் குறியாக்கத்துடன் உள்வரும் இயக்கக் கோப்புகளைப் பாதுகாக்கிறது, வெளியேறும்  கோப்புகள் ஏஇஎஸ் 256-பிட்(AES 256-bit encryption) குறியாக்கம் செய்து மறைக்குறியீட்டால் பாதுகாக்கப்படுகின்றன.இது இலவசம் மற்றும் கட்டண சேவைக்கும் பொருந்தும்.
மைக்ரோசாப்ட் ஒன்டிரைவில்  உள்வரும் மற்றும் வெளியேறும் கோப்புகளுக்கு  ஏஇஎஸ் 256-பிட்(AES 256-bit encryption) குறியாக்க பாதுகாப்பை வழங்குகிறது, ஆனால் இது கட்டண செலுத்தும் திட்டத்தில் உள்ள சந்தாதாரருடைய ஒன் டிரைவ் க்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும் .இலவச திட்டங்களில் உள்ள கோப்புகளுக்கு எந்த குறியாக்கத்தையும் வழங்காது. இது ஒன்ட்ரைவிற்கான ஒரு குறைபாடு ஆகும்.

7.முடிவுரை  - கூகிள் Vs மைக்ரோசாப்ட்

மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் மற்றும் கூகிள்டிரைவ் இரண்டுமே நிறை குறைகளினை கொண்டுள்ளன. ஒன்டிரைவ் ஒரே விலையில் கூகிள் டிரைவின் சேமிப்பிட இடத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வழங்குகிறது , கூகிள் டிரைவ் கோப்புகளை அனுப்பும் போதும் பெறும் போதும் அதன் அதிநவீன குறியாக்க வழிமுறைகளுடன் பாதுகாக்கிறது. மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸின் எல்லாருக்கும் தெரியும் படியான செயலையும்  மற்றும் எளிதான பயன்பாட்டையும் ஒன்ட்ரைவ் வழங்குகிறது ,பல்வேறு  பயன்பாட்டுகக்கள்  மூலம் ஒருங்கிணைப்புகளைப்  கூகிள்டிரைவ்  அனுமதிக்கிறது.
எனவே, அம்சங்களின் அடிப்படையில் எதை முன்னுரிமை செய்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..