Android Upgrade ஏன் அவசியமானது?

Android Upgrade  ஏன் அவசியமானது? மற்றும் Android ஐப் புதுப்பிக்க(Update)பண்ண  வேண்டிய அவசியம் என்ன?

புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியிடப்படும் போது, ​​தவிர்க்க முடியாமல் அதில் சிக்கல்கள் இருக்கும். இது மனிதனால் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் உண்மை நிலை .Android போனில்  புதிய அம்சங்கள், கூடுதல் வேகம், மேம்பட்ட செயல்பாடு, ஓஎஸ் மேம்படுத்தல் மற்றும் எந்த பிழைக்கும் சரி(new features, extra speed, improved functionality, OS upgrade and fixed for any bug) போன்ற மேம்பாடுகளை  பெற நாம் upgrade பண்ண வேண்டியது மிகவும் அவசியம்.நாம் நமது  மொபைலை எப்போதுமே புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும், பாதுகாப்பாகவும், விரைவாகவும்  நமது மொபைலில் நேரடியாக கிடைக்கும் மென்பொருளை கண்டிப்பாக பயன்படுத்தவும்,இந்த update ஆனது 3 வகைப்படும்.

நிலைத்தன்மை புதுப்பிப்புகள்(Stability update)

இது பெரும்பாலும் சோதனைகளின் மூலம் கண்டறியப்படும் தவறுகளினை சரி செய்வதற்காக அந்தந்த மொபைல்களுக்கு மாறுதல் செய்யப்படட சாப்ட்வேர் அனுப்பப்பட்டு புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது,இதில் பயனர் கண்டறிந்து சொல்லும் குறைகளும் சரி செய்யப் படும்.

பொதுவாக, இதில் 1000க்கு மேற்பட்ட பல்வேறு வகையான தனித்தனி  சோதனைகள் உள்ளன.எல்லா விஷயங்களிலும் இந்த நிலைத்தன்மை செயல்பாடு சரியாகத்தான் இருக்கின்றன என்பதினை உறுதிப்படுத்த இந்த சோதனைகள் அனைத்தும் செய்து பார்க்கப்படுகின்றன,மற்றும் ஓவர் ரேம் usage அல்லது spams அல்லது ஆன்டி வைரஸ் தாக்குதல்கள் போன்றவைகளால் போன் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த சோதனைகள் செய்யப்படுகிறது.

அனைத்து சோதனைகளும் ஆய்வகத்தில் போதுமான நீண்ட காலத்திற்கு கடந்து சென்றால், நமக்கு ஒரு  நிலையான வெளியீடு உள்ளது என்று அர்த்தம்.இது தொடர்ந்து கொண்டே இருக்கும் ,சோதனை வெற்றி பெற்றால் Stability update ஆனது  வந்து கொண்டே இருக்கும்,இதற்கு கால நேரம் எதுவும் கிடையாது,அடிக்கடி வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். எனவே நாம் மொபைல் வாங்கும் போது  நல்ல brand மொபைலாக அடிக்கடி updates கிடைக்கும் நிலையில் உள்ளவற்றினை வாங்க வேண்டும்,

2) பாதுகாப்பு புதுப்பிப்புகள்

இது முதன்மையாக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பிழைகளை (security and fixing bugs)சரிசெய்வதற்கும் உதவுகிறது. இந்த புதுப்பிப்புகள் பொதுவாக நமது  மொபைலில் எந்த மாற்றமும் செய்ததாக நமக்கு தெரியாது.இதற்கு android ஆனது முழு மொபைல் சொப்ட்வேரினையும் புதுப்பிக்காமல் ,அந்த குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சம் மற்றும் பிழைகளினை சரி செய்யும் software தொகுப்பினை  சிறிய update உடன் patch செய்து சரி செய்து விடுவார்கள்.பெயரிலேயே உள்ளது போல பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த புதுப்பிப்பு மிகவும் முக்கியமானது.ஒவ்வொரு மாதமும் கூகிள் ஆனது இந்த செக்யூரிட்டி பேட்ச்னை வெளியிட்டு கொண்டே இருக்கும்,முன்னணி brand மொபைல் நிறுவனஙகள் உடனடியாக தங்கள் தயாரிப்பு மொபைல் களுக்கு, ஒவ்வொரு மாடலுக்கு ஏற்றவாறு இந்த பாதுகாப்பு update னை  வெளியிடுவார்கள்.பெரும்பாலும் இது ஒரு மாதம்,3மாதம் ,6மாதம் போன்ற கால இடைவெளியில் வெளியிடப்படும்.

3) OS புதுப்பிப்புகள் - 

நமக்கு தெரியும்   android ஒரு கூகிள் தயாரிப்பு ,ஆனால் இது ஒரு open source இயங்கு தளம் ஆகும்,அதாவது இதை உருவாக்கியது யார்? என்றால் கூகிள் மற்றும்  பலதரப்படட மொபைல் தயாரிப்பாளர்களின்  டெவலப்பர்கள்   என்பது தான் உண்மை ,(Developer-Various (mostly Google and the Open Handset Alliance).இதனால் ஒவ்வொரு வருடமும் புதுப்புது அம்சங்களினை இந்த டெவலப்பர்கள் கண்டுபிடித்து வெளியிட்டு கொண்டே இருப்பார்கள்,அதற்கேற்ப ஒவ்வொரு வருடமும் android பதிப்பானது புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கும்,


android 1.0,1.1 ஆனது முறையே 2008,2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது,இப்போது android 11 ஆனது 2020-ல் வெளியிடப்பட்டது.முதல் ஆன்ட்ராய்டு போனில் அதிக அளவு சிறப்பான அம்சங்கள் இருந்ததில்லை,ஆனால் இப்போது finger print ,camera pixel ,memory போன்ற பல்வேறு தரப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்டிருக்கிறது,இதை தான் OS Upgrade என்கிறோம்,சிலசமயம் இந்த OS Upgradeக்கு மொபைலின் hardware support இல்லை என்றால் அதில் புது OSனை புதுப்பிக்க இயலாது,தற்போது android 11பதிப்பு ஆனது android 10-ல் உள்ள hardware அமைப்போடு ஒத்துப்போவதால் எல்லா முன்னணி மொபைல் தயாரிப்பாளர்கள் இந்த updateனை தங்கள் மொபைலுக்கு கொடுத்துள்ளார்கள் ,அதே போல் ஆன்ட்ராய்டு 12 ஆனது ஆன்ட்ராய்டு 11 பதிப்பு உள்ள மொபைல்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.