5G தொழில்நுட்பம்(Technology) : பகுதி 1

ணக்கம் நண்பர்களே, விரைவில் இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் சோதனை தொடங்கப்பட உள்ளது , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதற்குரிய முன்னேற்பாடுகளினை செய்து வருகிறது.


ஆனால் நமது சுற்றுச்சூழலுக்கும் மனித உடலுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் தீங்கு விளைவிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இதனால் என்ன தீங்கு செய்ய முடியும் மற்றும் 5 ஜி நெட்வொர்க்குடன் தொடர்புடைய அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பேசுவோம்.அதற்கு முன் ,5G என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது எவ்வாறு இயங்குகிறது? மிக எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமானால் , இது ஒரு அதி வேகமான நெட்வொர்க் ஆகும், இதன் உதவியுடன் எந்தவொரு 3 மணிநேர முழு நீளத் திரைப்படத்தையும் ஒரு சில நொடிகளில் பதிவிறக்கலாம்.ஆனால் இதற்கு அதிக எண் மதிப்பு கொண்ட அலைக்கற்றை (Radio Wave) தேவைப்படுகிறது,இதனால் இப்போது இருக்கும் தோலை பேசி கோபுரங்களினை (Cell Phone Tower) விட அதிக எண்ணிக்கையில் 5ஜி கோபுரங்கள் நிறுவ வேண்டி இருக்கும்.அலைக்கற்றை எண் மதிப்பு அதிகரிக்க, அதிகரிக்க signal தொடர்பு எல்லை குறைவாக இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே!,

தொலைபேசி நெட்வொர்க்கின் ரேடியோ அலைகள்:

5 ஜி , 4 ஜி, 2 ஜி, 1 ஜி என அனைத்து நெட்வொர்க்குகளும் ரேடியோ அலைகள் மூலமாக தான் வேலை செய்கிறது. மேலும் இந்த 1 ஜி, 2 ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி ஆகியவை ஒவ்வொரு நெட்வொர்க்கின் தலைமுறையினை குறிக்கிறது.

1G

1980-ல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 1 ஜி நெட்வொர்க் ஆனது கேரியர் அதிர்வெண் 30Khz மற்றும் இயக்க அதிர்வெண் 800MHz ஆகியவை கொண்டு 2.4Kbps வேகத்தை மட்டுமே கொடுத்தது,அந்த நேரத்தில் இது ஒரு புதிய தொழில் நுட்ப்பமாக இருந்தாலும் அதில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தது,தொடர்பு எல்லை குறைவு மற்றும் ஒலியின் தரம் ஆகியவை மிக குறைவாக இருந்தது ,குறியாக்கம் இல்லாததினால் பாதுகாப்பு குறைபாடும் இருந்தது,ரேடியோ உள்ளவர்கள் எவராலும் எளிதில் பேசுவதினை கேட்கலாம்,மற்றும் இதன் வேகம் 2.4 Kbps to 14.4 kbps என்ற அளவில் மிக குறைவாக இருந்தது.இது அனலாக் முறையில் வேலை செய்தது.எளிதாக சொல்ல வேண்டுமானால் பழைய ரேடியோவினை பயன்படுத்துவது போல் இருக்கும். விக்கிபீடியாவின் தகவல் படி , ரஷ்யாவில் மட்டுமே 1 ஜி செல்லுலார் நெட்வொர்க் செயல்பாட்டில் உள்ளது.

2G

முதல் தலைமுறை 1G உள்ள குறைபாடுகளினை களைய இரண்டாம் தலைமுறை தொழிநுட்ப்பமான 2G ஆனது 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது,2G ஆனது ஒலியின் தரம்,குறியாக்கம்,மற்றும் கணிசமான வேகம் 0.2 Mbps ஆகியவற்றினை கொண்டு இருந்தது,ஏனெனில் இது டிஜிட்டல் முறையினை கையாண்டது ,ஆனால் இன்றைய தரத்தில் நம்பமுடியாத அளவிற்கு மெதுவாக இருந்தது,2 ஜி நெட்வொர்க் ஆனது கேரியர் அதிர்வெண் 200 KHz மற்றும் இயக்க அதிர்வெண் GSM: 900MHZ, 1800MHz CDMA: 800MHz ஆகியவை கொண்டு 0.2 Mbps வேகத்தை மட்டுமே கொடுத்தது.இதில் சில அம்சங்கள் தற்போதைய ஸ்மார்ட் போன்களுக்கு முன்னோடியாக அமைந்தது,அவை நாம் எந்த போனில் வேண்டுமானாலும் நமது எண்னை மாற்றிக்கொள்ளும் வசதி,ஒலி மூலம் அழைப்புக்களினை தெரிந்து கொள்ளும் வசதி,குறுஞ்செய்தி அனுப்பும் வசதி,MMS எனப்படும் ஆடியோ மற்றும் வீடியோ அனுப்பும் வசதி போன்றவை ஆகும். இது நாம் தொடர்பு கொள்ளும் வசதியினை முற்றிலுமாக மாற்றியது.

3G

படிப்படியாக,2001 -ல் 3 ஜி நெட்வொர்க் வந்தது, இதன் காரணமாக கேரியர் அதிர்வெண் 5 MHz மற்றும் இயக்க அதிர்வெண் 2100 MHz கொண்டு 3.1 Mbps வரை வேகம் காணப்பட்டது.2G உடன் ஒப்பிடும்போது, 3G ஆனது தரவு பரிமாற்ற திறன்களை 4 மடங்கு வரை எட்டியது. இந்த அதிகரிப்பு காரணமாக, வீடியோ ஸ்ட்ரீமிங், வீடியோ மாநாடுகள் மற்றும் நேரடி வீடியோ அரட்டை உண்மையானது. மொபைல் சாதனங்கள் வழியாக மின்னஞ்சல்கள் மற்றொரு நிலையான தகவல்தொடர்பு வடிவமாக மாறியது. 3 ஜி புரட்சிகரமானது என்னவென்றால், இணையத்தை உலாவக்கூடிய திறன் மற்றும் மொபைலில் இசையை ஸ்ட்ரீம் செய்வது ஆகியவை ஆகும் . 2 ஜி அதே அம்சங்களை வழங்கினாலும், பதிவிறக்க வேகத்தைப் பொறுத்தவரை 3 ஜி வைத்திருந்ததை வேகத்தினை போல அவை முன்னேறவில்லை. 2008-ல் வெளியிடப்படட apple 3G அல்லது ஐபோன் 2 ஆனது இன்றைய ஸ்மார்ட் போன்களுக்கு வழி வகுத்தது,ஸ்மார்ட்போன்கள் பிரபலமடையத் தொடங்கியதால், வேகமான தரவு மற்றும் அதிகரித்த நெட்ஒர்க் திறன்களுக்கான தேவை அதிகரித்தது.

4G

படிப்படியாக,2009 -ல் 4 ஜி நெட்வொர்க்கின் கேரியர் அதிர்வெண் 15 MHz மற்றும் இயக்க அதிர்வெண் 850 MHz, 1800 MHz கொண்டு 100 Mbps வரை வேகம் காணப்பட்டது.இருப்பினும், 4 ஜி முதலில் தொடங்கியபோது, அது உண்மையில் 4 ஜி அல்ல. ITU-R 4G (12.5 Mbps) க்கு தேவையான குறைந்தபட்ச வேகத்தை அமைக்கும் போது, அந்த நேரத்தில் அதை அடைய முடியவில்லை. இந்த இலக்கை அடைய தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் செலுத்தும் பணத்தின் பிரதிபலிப்பாக, ஐ.டி.யூ-ஆர் (ITU-R )ஆனது இதற்கு எல்.டி.இ (LTE -Long-term evolution) 4 ஜி என்று பெயரிடலாம் என்று முடிவு செய்தது. 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, 4 ஜி தரவு பரிமாற்ற வேகத்தின் அடிப்படையில் அதன் திறனை எட்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் விரைவான வேகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதால், உலகிற்கு வேகமான நெட்ஒர்க் தேவை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். 5G அதை வழங்குகிறது.

5G

2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 5G ஆனது, இன்னும் வளர்ச்சி ஆராயும் நிலையில் உள்ளது.சில வல்லுநர்கள் இப்போது 5 ஜி 4 ஜியை விட 20 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறுகின்றனர். உண்மையில், கனடாவில் சராசரி 5 ஜியின் பதிவிறக்க வேகம் 169.46 எம்.பி.பி.எஸ். இது ஏற்கனவே 4G ஐ விட 205% வேகமாக உள்ளது! இப்போது மீண்டும் தலைப்பிற்குள் வரலாம்,ஆனால் 5G ஆனது மற்ற தலைமுறை தொழில்நுட்பத்தினை போல் இல்லாமல் , FR1 மற்றும் FR2 என்று 2 அலைவரிசைகளில் வேலை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.அவை FR1 ஆனது 450 MHz to 6 GHz மற்றும் FR2 ஆனது 24.25 GHz to 52.6 GHz அலைவரிசையில் வேலை செய்யும் ,எதற்கு இந்த 2 அளவரிசையினை பயன்படுத்துகிறார்கள் என்றால் ,5ஜி சாதனமானது எப்போதும் இரண்டு வழிகளில் தொடர்புகளினை எடுத்து கொள்ளும் ,முதலில் தொலைபேசி கோபுரங்களுடன் தொடர்பு கொள்ள 450 MHz to 6 GHz அலைவரிசையை பயன்படுத்திக்கொள்ளும் ,இரண்டாவது 5ஜி சாதனம் யாரல்லெல்லாம் வைத்திருக்கிறார்களோ அந்த சாதனங்களோடு ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள 24.25 GHz to 52.6 GHz அலை வரிசையினை பயன்படுத்திக்கொள்ளும்.கிட்டத்தட்ட நாம் ஒரு 5ஜி மொபைல் வைத்திருந்தால் அதுவும் ஒரு மைக்ரோ தொலைபேசி கோபுரம் போல் வேலை செய்யும்.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் தரப்பட்ட தகவல் படி , முழுமையான 5 ஜி நெட்வொர்க்கில் 20 ஜிபி தரவிறக்கம் மற்றும் 10 ஜிபி தரவேற்றும் வசதி இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. 4G ஐ விட பல மடங்கு அதிகமாக அலைவரிசை இருப்பதால், அதிக கனமான மின்காந்த அல்லது ரேடியோ அலைகளை சுற்றுச்சூழலுக்கு வெளியிடுகிறது.

ஏன் 5 ஜி வானொலி அலைகள் மற்றும் அதிர்வெண்கள் ஆபத்தானது என்று கருதப்படுகிறது ? என்பதினைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.