கண்டிப்பாக இருக்க வேண்டிய Software :பகுதி-1

நமது கணினியில் கண்டிப்பாக இருக்கவேண்டிய மென்பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..

தேடல் கருவி (search ):


விண்டோஸ் தேடல் (விண்டோஸ் சர்ச் )என்பது டெஸ்க்டாப் வழியாக நமது கணினியில் உள்ள பயன்பாடுகளினை தேடும் ஒரு தேடல் தளமாகும்,ஆனால் இது மிகவும் பொதுவான கோப்பு வகைகள் ஆன மைக்ரோசாப்ட்டின் office பைல்கள் மற்றும் பயன்பாடு(Installed software) வகைகளுக்கான உடனடி தேடல் திறன்களைக் கொண்டுள்ளது,இருப்பினும், விண்டோஸின் தேடலில் ஏதாவது ஒன்றினை குறிப்பிட்டு தேடினால் மைக்ரோசாப்ட் தேடல் அமைப்பு எல்லா இடங்களிலும் வரிசையாக எல்லா விதமான கோப்பு வகைகளினை தேடி நீங்கள் குறிப்பிட்ட ஓன்று வந்தவுடன் அதனை வரிசைப் படுத்தும்,மீண்டும் மீண்டும் நீங்கள் குறிப்பிட்ட ஒன்றினை உங்கள் கணினியில் முழுவதும் இருக்கிறதா என்று கண்டறிந்து நமக்கு வரிசைப்படுத்தி காண்பிக்கும். இது முழு கோப்பு முறையிையில் உண்மையான தேடலை செய்கிறது. அதனால் தான் இது மிகவும் மெதுவாக இருக்கிறது.அதனால் நீங்கள் சர்ச் என்ஜின் இன்டெஸ் என்ற அமைப்பை 'ஆம்' என்று பதிவு செய்து இருக்க ண்டும்,மேலும் குறைந்த வேகம் கொண்ட SSD (solid-state drive) மற்றும் நல்ல CPU உடன் இருந்தால் நீங்கள் தாராளமாக search engine index-னை ON செய்து வைக்கலாம்,இதனை நீங்கள் ON செய்து வைத்தால் இந்த தேடுதல் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.தேடுதல் அட்டவணைப்படுத்தல் அல்லது index அமைப்பை ON செய்வதால்,கணினிக்கு எந்த வித இழப்பும் வராது.இது இயக்கப்பட்டவுடன், எல்லா தேடல்களும் குறியிடப்படுகின்றன, இதனால் தேடல்கள் வேகமாக இருக்கும் - இருப்பினும், தேடல் அம்சமானது CPU மற்றும் RAM ஐப் பயன்படுத்துகிறது, எனவே அதனை பெரும்பாலும் OFF நிலையில் தான் வைப்பதுண்டு. அதனால் CPU மற்றும் RAM -ன் செயல்திறன் குறையாமல் இருக்க செய்யலாம்.மேலும் இன்டெக்ஸ் அமைப்பு கீழ்கண்ட முறைகளில் செயல் படுத்தலாம்,
  • நல்ல CPU மற்றும் தரமான HDD இருந்தால்  ON நிலையில் வைக்கலாம்.
  • சாதாரண CPU மற்றும் சாதாரண HDD இருந்தால் OFF நிலையில் வைக்க வேண்டும்.
  • நல்ல அல்லது சாதாரண CPU உடன் SDD இருந்தால் ஆப் நிலையில் வைக்க வேண்டும்.

HDD vs. SSD

கணினியில் கண்டிப்பாக இருக்கவேண்டிய மென்பொருட்கள்HDD

2003 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, SATA (Serial Advanced Technology Attachment) நினைவு வட்டு என்பது பெரும்பாலான டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் ஹார்ட் டிரைவ்களுக்கான இயல்பாகவே இவை பயன்படுத்தப் படிக்கிறது. அவை SATA ஹார்ட் டிரைவ்கள் என்று குறிப்பிடப்படுகின்றன, ஆனால் அவை உண்மையில் ரோட்டரி ஹார்ட் டிரைவ்கள் ஆகும் , இதில் சுழலும் தட்டுக்கள் கொண்ட ரோட்டரி ஹார்ட் டிரைவ்கள் உள்ளன . மற்றும், ஒவ்வொரு தட்டிலும் தொடர்ச்சியாக எழுதும் மற்றும் படிக்கும்(Read & Write)நகரும் ஊசி(Moving laser needle) பொருத்தப்பட்டு உள்ளது.

SDDSSD

எஸ்.எஸ்.டி (SSD) என்பது சாலிட் ஸ்டேட் டிரைவை(Solid State Drive) குறிக்கிறது. இந்த நினைவு வட்டுகளில்(Memory Card) நகரும் பாகங்கள் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, எல்லா தரவும் நிலையற்ற தற்காலிக (Flash storage) நினைவகத்தில் சேமிக்கப்படுகிறது. அதாவது தரவைப் படிக்க அல்லது எழுத நகர வேண்டிய ஊசி அமைப்பு இல்லை அதனால் அவை SATA இயக்கிகளை விட கணிசமாக வேகமானவை என்றும் அர்த்தம். SSD யின் சரியான வேகத்தைக் கண்டுபிடிப்பது கடினம், ஏனெனில் இது உற்பத்தியாளர்கள் மற்றும் form factor ஆகியவற்றால் மாறுபடும், ஆனால் குறைந்த செயல்திறன் கொண்ட நினைவு வட்டுக்கள்(SD CARD) கூட SATAவுக்கு சமமாக வேலை செய்யும். (உதாரணம் :Mobile Memory Card )

விண்டோஸ் தேடல் அட்டவணை (search index) பண்ணுவதினை தடுக்க கீழ்கண்ட வழிமுறையினை பின்பற்றலாம் 



win மெனுவைத் திறந்து index என்று தட்டச்சு செய்தால் . தேடுதல் விருப்பங்கள்(search option ) என்பதைக் கிளிக் செய்க.

இதில்,உதாரணமாக டிரைவ் D -ல் நீங்கள் உங்கள் வேலை அல்லது எல்லா விதமான தகவல்களினையும் வைத்து இருக்கிறீர்கள் ,அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான தகவலினை தேடிக் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகிறது.இந்த சமயத்தில் நீஙகள் தேடுதல் விருப்பத்தில் டிரைவ்-D -ல் உள்ள தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் டிக் பண்ணவும் ,இப்போதுு நீங்கள் விண்டோஸ் தேடுதல் உலாவியில் தேவையான தேடுதல் குறிப்பினை தட்டச்சு செய்தால் உடனடியாக உங்கள் தேடுதல் குறிப்பில் உள்ள தகவல்கள் அட்டவணைப்படுத்தப் படும்.


இதனால் தான் மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் அதிகமான புதிய கோப்பு வகைகள் (file type /extension )மற்றும் தேடுதல் விருப்பங்களினை நீட்டித்து வெளியிடுகின்றனர்.அதில் ஒரு மிகச் சிறந்த கருவி "Everything" ஆகும்,இது ஒரு இலவச பதிப்பு,நமது கணினியில் கண்டிப்பாக இருக்கவேண்டிய மென்பொருட்களில் இதுவும் ஓன்று.

"எல்லாம்"-Everything

கணினியில் கண்டிப்பாக இருக்கவேண்டிய மென்பொருட்கள்

 "எல்லாம்" (Everything) என்பது ஒரு தேடுபொறி, விண்டோஸ் தேடலைப் போலல்லாமல்  ஆரம்பத்தில் உங்கள் கணினியில் ஒவ்வொரு கோப்பையும் கோப்புறையையும் காண்பிக்கும் (எனவே தான்   "எல்லாம்" என்று  பெயர்).எந்த கோப்புகள் மற்றும் கோப்புறைகள் காண்பிக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த நீங்கள் தேடுபொறியில் தட்டச்சு செய்ய வேண்டும்.குறியீட்டு கோப்பு(file) மற்றும் கோப்புறை(Folder) பெயர்கள் குறித்த தரவுத்தளத்தை உருவாக்க சில வினாடிகள் மட்டுமே ஆகும்.இதன் புதிய பாதிப்பானது சுமார் 1,20,000 கோப்புகள்(files)) தரவுத்தளத்தை உருவாக்க 1 வினாடி எடுக்கும்.1,000,000 கோப்புகள் 1 நிமிடம் எடுக்கும்.மற்றும் மிகக் குறைந்த கணினி செயல் திறனைப் பயன்படுத்துகிறது.சுமார் 1,20,000 கோப்புகளுக்கு14 எம்பி ராம் மற்றும் 9 எம்பிக்கு குறைவான வட்டு(HDD ) இடத்தைப் பயன்படுத்தும்.1,000,000 கோப்புகளுக்கு 75 எம்பி ராம் மற்றும் 45 எம்பி வட்டு(HDD) இடத்தைப் பயன்படுத்தும்.இதில் தீங்கு வரவழைக்கும் எந்த விதமான ஸ்பைவேர்(spyware) அல்லது ஆட்வேர்(adware) இல்லை.

உதாரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் exel அதிகமாக உபயோகப் படத்துபவர் என்றால் நீங்கள் தேடு பொறி கட்டத்தில் .xls அல்லது .xlsx என்று தேடினால் அது உங்கள் கணினியில் உள்ள எல்லா exel பைல்களினையும் உடனடியாக தெரிவிக்கும் ,ஒருவேளை அந்த exel பைலின் பெயர் தெரிந்து இருந்தால் அதனையும் தேடு பொறியில் தேடினால் அந்த குறிப்பிட்ட பைல் முதலில் தெரியும்.பெயர் தெரியவில்லை என்றால் நீங்கள் தேடும் பைலின் நீட்சியினை பயன்படுத்தலாம் .உதாரணமாக Exel பைல்கள் .xls அல்லது .xlsx என்று பெயரிடப்பட்டு இருக்கும்,அதே போல் Word பைல்களுக்கு .doc அல்லது .docx என்றும்,பவர் பாயிண்ட்க்கு .ppt அல்லது .pptx என்றும் இருக்கும்,புகைப்படங்களுக்கு .jpg ,.jpeg ,.png என்றும் நீங்கள் தேடு பொறியில் தேடலாம்.கடைசி பைல் extension வைத்து எந்தவிதமான பைல்களையும் மிக எளிதாக கண்டறியலாம். முடிந்தால் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்,கணினியில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.