S o c என்றால் என்ன?
S o c என்றால் என்ன?
Multiple componentகளினை ஒரே Chipல் இணைப்பதால் இடம் மற்றும் செலவினங்களினை குறைக்கிறது. Display, RAM, ROM, Storage போன்றவற்றினை ஒரே Chip ல் இணைக்கிறது. அடிப்படையில் SoC என்பது ஸ்மார்ட்போனின் மூளை ஆகும். இது Android Systemமினை ON பண்ணுவது முதல் power off பண்ணுவது வரை உள்ள அனைத்தையும் கையாள்கிறது.
1.மத்திய செயலாக்க பிரிவு (CPU):
Socன் மூளை போன்றது ஆகும். இது Android இயங்குதளம் சார்ந்த அனைத்து செயலிகளின் இயக்கங்களையும் செய்கிறது
2.கிராபிக்ஸ் செயலாக்க பிரிவு(GPU):
- ARM Mali
- Qualcomm Adreno
- Imagination Power VR
- NVidia GeForce
3.பட செயலாக்க பிரிவு (Image Processing Unit):
ஸ்மார்ட்போனின் Camera விலிருந்து வரும் தகவல்களினை படம் மற்றும் திரைப்படம் வடிவில் மாற்றுவதற்கு பயன்படுகிறது
4.டிஜிட்டல் சிக்னல் செயலி(Digital Signal Processor):
ஒரு CPU வி னைவிட கணிதரீதியாக தீவிரமான செயல்களினை கையாள்கிறது, music file களினை decompress பண்ணுவது மற்றும் gyroscope தரும் தகவல்களினை பகுப்பாய்வு செய்வதும் இதன் வேலை ஆகும்.
5.நரம்பியல் செயலாக்க பிரிவு (Neural processing unit):
Al- Artificial Intelligence எனும் இயந்திர பார்வை மூலம் பகுத்தாய்வு பணிகளினை வேகமாக செய்ய உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் பயன்படுதப்படுகிறது. இதில் பேச்சு மற்றும் புகைப்படம் மூலம் பல்வேறு செயல்களினை கட்டுப்படுத்தும் அம்சமும் அடங்கும்.
6.வீடியோ encoder மற்றும் Decoder:
மிகவும் விரைவாக வீடியோ - file கள் வடிவங்களினை மாற்றுவதற்கும், கையாள்வதற்கும் பயன்படுகிறது.
7.மோடம்கள்(Modems):
இது microwave அலைகளின் வழியாக வரும் தகவல்களினை ஸ்மார்ட்போனுக்கு தேவையான வகையில் மாற்றி தருகிறது. இதில் 4G LTE ,5G, Wi-Fi மற்றும் Bluetooth ஆகியவகைகளும் அடங்கும்
இறுதியாக SoCகானது உற்பத்தி செயல்முறையின் ஒரு அங்கமாக பார்க்கபடுகிறது. இதனை nm என்ற nanometer என்ற அலகின் படி வடிவம் அடிப்படையில் பட்டியல் இடப்படுகிறது. பொதுவாக nm அளவு சிறியதாகவும் அதன் செயல்திறன் அதிகமாகவும் உள்ளவாறு தயாரிக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலும் ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு 7nm SoCகள் பயன்படுத்தப்படுகிறது.
Post a Comment