ஸ்ட்ரீமிங் பாடல்களினை தரவிறக்கம் செய்யும் முறை:
நாம் இன்று Spotify, Gaana, YouTube, YouTube Music போன்றவற்றிலிருந்து நமக்கு பிடித்த பாடல்களினை எப்படி தரவிறக்கம் செய்யலாம் என்பதினை பற்றி பார்க்கலாம்:
நாம் இன்று Spotify, Gaana, YouTube, YouTube Music போன்றவற்றிலிருந்து நமக்கு பிடித்த பாடல்களினை எப்படி தரவிறக்கம் செய்யலாம் என்பதினை பற்றி பார்க்கலாம்:
![]() |
ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து பாடல்களினை தரவிறக்கம் செய்யும் முறை |
மியூசிக் ஸ்ட்ரீமிங்(music streaming):
மியூசிக் ஸ்ட்ரீமிங்(music streaming):
இசையில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட ஸ்ட்ரீமிங் சேவைகளின் உயர்ந்த தரம் மற்றும் கவர்ச்சிகரமான வடிவங்களுடன் உள்ள இந்த பயன்பாடுகளை எதிர்ப்பது கடினம் தான் ,நமது தொடுதிரையினை தட்டுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பாடல்களினை அணுகும் திறன் என்பது நமக்கு பிடித்த புதிய மற்றும் பழைய பாடல்களின் மேல் உள்ள இசை ஆர்வத்தினை இன்னும் அதிகரிக்கசெய்கிறது.
அமேசான், ஆப்பிள், ஸ்பாடிஃபை,யூடூப்,யூடுப் மியூசிக் ஆகியவை உலக அளவில் முதலிடத்தில் உள்ளன , அவைகளை இணையத்தின் மூலம் அல்லது மொபைல் நெட்வொர்க்கின் மூலம் ஸ்ட்ரீம் செய்யப்படலாம் அல்லது பதிவிறக்கம் செய்யப்படலாம். ஆஃப்லைனில் கேட்பதற்கு பயன்பாடு வழியாக உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்யலாம்.ஆனால் இதனை அந்த குறிப்பிட்ட பயன்பாடு வழியாகவே பயன்படுத்த முடியும்.இதனால் நாம் நமக்கு பிடித்தவர்களுக்கு அனுப்பவோ அல்லது நமக்கு பிடித்த பிளேயர் பயன்பாட்டில் பயன்படுத்தவோ முடியாது.
ஸ்பாட்டிபிலியர் என்பது Spotify, Gaana, YouTube, YouTube Music போற்ற ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளிலிருந்து பாடல்களை தரவிறக்கம் செய்யும் செயல் கொண்ட பயன்பாடு (application)ஆகும்.இதில் நீங்கள் ஒரு பட பாடல்கள்(Album),தனிப்பாடல்கள்(Songs) மற்றும் பாடல் தொகுப்பு(Playlist) ஆகியவற்றினை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் பிடித்தமான பாடல்களை ஆன்லைனில் மீண்டும் மீண்டும் ஸ்ட்ரீமிங் செய்யாமல் உங்கள் இணைய செலவினை சேமிக்கலாம் .(பாடல்களினை பதிவிறக்கம் செய்வதினால்),இந்த பயன்பாட்டில் எரிச்சலூட்டும் விளம்பரஙகள் கிடையாது ,முற்றிலும் இலவசமான பயன்பாடு ஆகும்.
நிறுவுதல் (installation):
நிறுவுதல் (installation):
ஸ்பாட்டிபிலியர் எல்லாவிதமான இயங்குதளங்களுக்கும்(windows, android ,Mac ,iPhone ) ஏற்ற நிறுவுதல் அமைப்பை கொண்டுள்ளது .நீங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக Spotify, Gaana, YouTube, YouTube Music ஆகிய பயன்பாடுகள் நிறுவியிருக்க வேண்டும்.விண்டோஸ் பதிவினையும் நீங்கள் பயன்படுத்தலாம்,அல்லது web பதிப்பினை பயன்படுத்தி url கொண்டு நேரடியாக உங்கள் கணினியில் மற்றும் மொபைலில் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.
ஆன்ட்ராய்டு மொபைலில் நிறுவி பயன்படுத்தும் முறை :
கீழே உள்ள இணைப்பில் ஸ்பாட்டிபிலியர் பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் நிறுவவும்,பின்னர் பயன்பாட்டினை திறந்து ,முகப்பு திரையில் உங்களுக்கு தேவையான ஸ்ட்ரீமிங் பயன்பாட்டினை திறக்கவும்,நான் இங்கு Spotify வழியாக பயன்படுத்தும் முறை பற்றிய புகைப்படத்தினை பதிவிட்டுளேன்,இதில் நீங்கள் Spotify ல் உங்களுக்கு விருப்பமான பாடல் அல்லது பாடல் தொகுப்பினை தேர்வு செய்து ,மேலே வலப்புறம் உள்ள மமன்று புள்ளி வடிவத்தினை தட்டி அதில் உள்ள share என்ற பகுதியை தட்டினால் அடுத்த பகுதி திறக்கும் ,இதை உள்ள copy link என்ற பகுதியினை தட்டினால் link ஆனது copy செய்யப்பட்டுவிடும் ,பின்னர் ஸ்பாட்டிபிலியர் செயலியின் முகப்பு பக்கத்திற்கு வந்து link ஐ paste செய்யவும்,அதனையடுத்து நீஙகள் search வடிவத்தினை தட்டினால் அதற்கு அடுத்த பகுதியில் நீங்கள் ஒரு பாடல் அல்லது பாடல்களின் மு தொகுப்பு ஆகிய இரண்டில் எதாவது ஒன்றை தேர்வு செய்து பதிவிறக்கி கொள்ளலாம்.எனது அனுபவத்தின் படி நீங்கள் தனிப்பாடல்களாக பதிவிறக்குவது சிறந்த வழிமுறை ஆகும்,பாடல் தொகுப்பு(Download all) மூலம் தரவிறக்கம் மேற்கொண்டால் சில பாடல்கள் தரவிறக்கம் ஆகாமல் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
Post a Comment